தமிழகத்தில் ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, ஜூன்-5

தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் இன்றும் 6-வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது ;-

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 15,762 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 861 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 232-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1116 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 19,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 73 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 11,345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 5,60,673 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.93% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,692 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1438 பேருக்கு தொற்று உறுதியானது.
  • கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும்.
  • கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை. இறப்பு, பரிசோதனைகாலை குறைத்து சொல்வது அடிப்படை ஆதாரமற்றது.
  • 30 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து கொரோனா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தடுப்பூசிகள், மருந்துகள் இல்லமால் சிகிச்சை அளிக்கும் முறையை அரசு பின்பற்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *