வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-5

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 – 50 கிமீ வேகத்தில் வீசுவதால் இன்றும், நாளையும் தென் கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

அடுத்தவாரம் 10ம் தேதியில் இருந்து சென்னை, திருவள்ளூர், புதுச்சேரியில் வெப்பச் சலனத்தால் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூரில் மாலை அல்லது இரவில் இடியுடன் மழை பெய்யும்.ஜூன் 10ல் இருந்து 14 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.வடக்கு அந்தமான் கடலில் அடுத்தவாரம் காற்றழுத்த சுழற்சி உருவாகி தீவிரமடைந்து, 9-10 ஆகிய தேதிகளில் ஒடிசா வரும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *