திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.. அமைச்சர் SP வேலுமணி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைய இறைவனைய பிரார்த்திப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

சென்னை, ஜூன்-5

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இன்று காலை திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் J அன்பழகன் விரைவில் குணமடைந்து பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *