கருப்பை பிரச்னைகளுக்கு தீர்வு தரும் மாதுளை

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை .உடல் ஆரோக்யத்துக்கு தேவையான அனைத்து தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் நிறைந்துள்ள மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.

குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை,கருப்பை பிரச்சனைகளுக்கு மாதுளை சிறந்த தீர்வதருவதாக  மருத்துவர்கள் கூறுகின்றனர்.கருவுற்ற பெண்களுக்கு தொடக்க காலத்தில் ஏற்படும் வாந்தி மயக்கம் மற்றும் ரத்தம் குறைவு போன்றவற்றிற்கு மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம்   சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

வாந்தி, மயக்கம் அதிகமாகும்போது 200 மி.லி. மாதுளை சாற்றில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி இஞ்சிசாறு, சிறிதளவு தேன் கலந்து பருக வாந்தி, மயக்கம் குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும். இதனை நாளும் காலை, மாலை இருவேளை பருகலாம்.

கருப்பையில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மாதுளை சிறந்த மருந்து. கருமுட்டை ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது.மேலும் கருப்பை புற்று பாதிப்பு உள்ளவர்கள் மாதுளம் பழம் சிறந்த நிவாரணியாக உள்ளது.  ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து செல்வளர்ச்சிக்கு உதவுதாக மருத்துவர்கள்  தெரிவிக்கின்றனர். மாதுளம்பழத்தில் உள்ள யுரோலித்தின் ஏ என்ற பொருள், நம் உடலில் செல் சுத்திகரிப்பு மையமான மைட்டோகாண்ட்ரியாவில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தச் செய்கின்றன. இதன்மூலமாக, உடலில் உள்ள செல்கள் வயது முதிராமல் தொடர்ந்து, ஆற்றலுடன் செயல்பட முடிகிறது.

 மாதுளை பிஞ்சிற்கும், மாதுளை பழத்தோலுக்கும்கூட மருத்துவ சக்தி உண்டு. வயிற்றுப் போக்கு மற்றும் சீதக்கழிச்சல் ஏற்படும்போது மாதுளை பிஞ்சை அரைத்து 100 மி.லி. மோரில் கலந்து குடிக்க வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில், சிறிதளவு மாதுளம்பழ தோலை எடுத்து, 200 மி.லி. நீரில் கொதிக்கவைத்து தேன் கலந்து பருகவேண்டும்.மாதுளையை மணப்பாகு செய்து அன்றாடம் பருகி வந்தால் கருப்பை பிரச்சனைகளுக்கு  தீர்வு தருவதோடு உடல்  பொலிவும் கூடும்.

மாதுளையில் வைட்டமின்கள் டி,சி, மற்றும்  துத்தநாகம்,இரும்பு, காப்பர், மக்னீசியத்தோடு நார்சத்தும் இருப்பதால் பொடுகை நீக்கி பெண்களின்  கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.  சிவப்பு நிறம் கொண்ட மாதுளைகளை விட வெள்ளை நிற மாதுளைகள் சிறந்த  மருத்துவ குணமுடையது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *