திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-5

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வாகவும் உள்ள ஜெ.அன்பழகன், கடந்த செவ்வாய்க்கிழமை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் மூச்சுத்திணறலோடு அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஜெ.அன்பழகன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோதே அவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு அதிகமாக இருந்தது. முதலில் அவருக்கு மூக்கின் வழியே பிராண வாயு வழங்கப்பட்டது. ஆனாலும், அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாததால், செயற்கை சுவாசக் கருவிகள் (வெண்டிலேட்டா்) பொருத்தப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் (வியாழக்கிழமை மாலை நிலவரப்படி) அன்பழகனின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.

இந்நிலையில், எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், 67% மட்டுமே இன்று தேவைப்படுகிறது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *