ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.23 கோடி அபராதம் வசூல்…தமிழக காவல்துறை தகவல்…!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10,21,80,599 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-5

இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து, 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,82,877 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4777 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 4,48,456 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது. இதுவரை, 5,44,566 வழக்குகளும், ரூ.10,21,80,599 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4232 வழக்குகளும், ரூ..22,94,160 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *