வழிபாட்டுத்தலங்கள் திறப்பின்போது என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?.. மத்திய அரசு அறிவிப்பு..!

மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய பல புதிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

டெல்லி, ஜூன்-5

பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் , வரும் 8 ஆம் தேதி முதல் மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது பின்பற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

  • வழிபாட்டு நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும்.
  • வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.
  • வெப்ப அளவீடு செய்யும்முறை இருக்க வேண்டும்.
  • அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
  • சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
  • அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது.
  • பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை.
  • ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
  • வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும்.
  • பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.
  • கரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும்.

*அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட வேண்டும்.

  • சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.
  • வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
  • வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் (வட்டம் அல்லது சதுரம்) வரைந்திருக்க வேண்டும்.
  • முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும்.
  • வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்செல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும்.
  • கழிவறைகள், கை – கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *