துன்பதுரை என்பதா?? இன்பதுரை பாய்ச்சல்…

அக்டோபர்-05

ராதபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரையை துன்பதுரை என ஸ்டாலின் கூறியதற்கு இன்பதுரை பதிலளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016 தேர்தலின் போது, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பாவு தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது, உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை தற்போது துன்பதுரை ஆகிவிட்டார் என விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள, ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ, இன்பதுரை, தமக்கு தூய தமிழில் பெயர் வைத்திருப்பதாகவும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் வடமொழியில் பெயர் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அழகான தமிழ் பெயரை இப்படி கிண்டல் செய்வதா என்றும் இன்பதுரை கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *