தமிழகத்தில் தொடந்து 5-வது நாளாக ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 1,384 பேருக்கு உறுதி..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஜூன்-4

தமிழகத்தில் கடந்த மே 31-ந்தேதியில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் இன்று 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐந்தாவது நாளாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 27,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 14,901 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 585 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 220-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1072 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 18,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 74 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 12,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 5,44,981 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.80% ஆக உள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.67% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,447 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1384 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16,694 ஆண்கள், 10,278 பெண்கள், 14 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *