கொரோனா நெருக்கடியை வாய்ப்பாக மாற்ற துவங்கி விட்டோம்.. இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை…!

கொரோனாவால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை இந்தியா வாய்ப்பாக பார்க்க தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லி, ஜூன்-4

இந்தியா-ஆஸ்திரேலியா பிரதமர்கள் இடையே மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடியும் ஆஸதிரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்திய பிரதமர் மோடி பேசும்போது, கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்த பின்னர், ஆஸ்திரேலிய பிரதமர் குடும்பத்தினருடன் இந்தியா வரவேண்டும் எனறு கேட்டுக்கொண்டார்.

‘கொரோனா வைரஸ் உலகின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையில் இருந்து விடுபட இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை இந்தியா வாய்ப்பாக பார்க்க தொடங்கிவிட்டது. இந்தியா-ஆஸ்திரேலிய உறவு விரிவடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான உறவு உலகிற்கு நன்மை பயப்பதாகவும் உள்ளது’ என்றும் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுத் தலைவருடன் இருதரப்பு மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *