தேசத்துரோக வழக்கு: அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் கண்டனம்…

அக்டோபர்-05

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 திரைப்பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு அரசியல் கடசி தலைவர்கன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள், இனவெறி ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

சிறுபான்மையினருக்கு ஆதரவாக மோடிக்கு கடிதம் எழுதியது தேசத்துரோக குற்றமா? என்றும், ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா அல்லது சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை காப்பாற்றிட, 49 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:

ஜனநாயக நாட்டில் கருத்துரிமையை பறிப்பதும் மாற்று கருத்து கூறுவோரை தேசத்துரோகிகளாக சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இத்தகைய போக்கை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கைவிட வேண்டும் என்றும், வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன்:

இதுபோன்ற செயல் எந்தவொரு ஆட்சியிலும் நடக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விகாரத்தில் அபாயகரமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், மணிரத்னம் உள்ளிட்ட 49 மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ்:

சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால் உதவியற்றவர்களின் நிலையும் அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும் என கேள்வியெழுப்பினார்.
இது போன்ற சூழ்நிலைகள் மூலம் மோடி சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறார் என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன்:

பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேசத்துரோக வழக்கு என்பது மிகவும் வருத்தமானது. கடிதம் எழுதுவதில் என்ன தேசதுரோகத்தை பார்த்தீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன்:

பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது ஜனநாயக முறையிலும் நாகரீக முறையிலும் விடுக்கப்பட்ட கோரிக்கை. தங்களுடைய சமூக பொறுப்பை தான் அவர்கள் செய்தார்கள்’ என்று கூறி இருக்கிறார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்:

நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்வது வழக்கமான ஒன்று. பொறுப்பான மக்களின் ஜனநாயக செயல்பாடுகளை மதிக்காத அரசின் மாண்பு மங்கி வருவதையே காணமுடிகிறது என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *