இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்வு.. 6075 பேர் பலி..!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி, ஜூன்-4

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 216919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 260 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6075 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 104107 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 3804 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 106737 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2587 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32,329 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 25,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,316 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 23,645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 606 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9542 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *