சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய மண்டலங்கள் எவை?.. பட்டியல் வெளியீடு..!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் ஏராளமான மண்டலங்களில் 1000ஐ தாண்டி கொரோனா பாதிப்பு சென்று கொண்டிருக்கிறது.

சென்னை, ஜூன்-4

தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 158-ஆக உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 2,029 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,798 பேருக்கும், அண்ணாநகரில் 1,525 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 2,093 பேரும், தேனாம்பேட்டையில் 2,014 பேரும், திருவொற்றியூரில் 610 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *