மோடி அச்சத்தை தூண்டுகிறார் – பிரகாஷ்ராஜ்

பெங்களூரு, அக்டோபர்-05

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ்ராஜ், பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால் உதவியற்றவர்களின் நிலையும் அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும் என கேள்வியெழுப்பினார்.
மோடி ஒரு நாட்டின் தலைவர், இரு தரப்பின் கருத்துகளையும் கேட்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறார் என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *