நடிகை மியா ஜார்ஜ் – தொழிலதிபர் அஸ்வின் பிலிப் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்..
நடிகை மியா ஜார்ஜ்க்கு தொழிலதிபர் அஸ்வின் பிலிப்புடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
ஜூன்-3

மலையாள நடிகையான மியா ஜார்ஜ், தமிழில் அமர காவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மியா ஜார்ஜ், தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பை விரைவில் மணமுடிக்கவுள்ளார். 23 வயது மியா – அஸ்வின் பிலிப் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். கோட்டயத்தைச் சேர்ந்த அஸ்வின், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளது.



