ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. பிரகாஷ் ஜவடேகர்

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஜூன்-3

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது ;-

நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலீடுகளை அதிகரித்து அதன் மூலம் தொழில் வளர்ச்சி அடைவதால் வேலை வாய்ப்புகள் பெருகும். ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உற்பத்தியைப் பெருக்க வழிகாட்டுதல்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விளைப்பொருட்களை தடையின்றி விற்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகளுக்காக 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயித்து கொள்ள இது வழிவகுக்கும். அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து சில எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையை சியாமா பிரசாத் முகர்ஜி அறக்கட்டளை என பெயர்மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர்கள், துறைகளில் அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு மற்றும் திட்ட மேம்பாட்டு செல்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *