கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த அமைச்சர் S.P.வேலுமணியின் வினாடி வினா..!

ஜூன்-3

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகள் மற்றும் நிபந்தனைகளுடன் அமலில் உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலுமணி தமது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்ட நிலையில் கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் தமது www.namakaagaspv.com என்ற இணையதளத்தில் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான வினாடி வினாவை தொடங்கி இருக்கிறார். அதற்கான இணைப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர், அந்தப் பக்கத்தில் வழக்கமான கெட்டப்பில் இல்லாமல், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தை வைத்துள்ளார்.

அதில் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சஸர்ஸ் எடுத்த வீரர் யார்? டெஸ்ட் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ் எடுத்த அணி எது? எந்த அணியின் கேப்டன் அதிக ICC கோப்பைகளை வென்றது? போன்ற மொத்தம் 10 வினாக்கள் இடம்பெற்றுள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் எளிதாக வெல்லக் கூடிய வினாக்கள் உள்ளதால், அவர்கள் உற்சாகமாக பங்கேற்று ஸ்கோர் போர்டில் செஞ்சுரி அடித்து வருகின்றனர். கொரோனா வைரஸை தடுக்க வீட்டுக்கு வெளியே என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாகியுள்ள நிலையில், பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மருந்துகள், உணவுகள், பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் S.P.வேலுமணி தமது இணையதள பக்கத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது குறித்த வினாடி வினாவை தொடங்கி பொதுமக்களின் பாராட்டுதல்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *