10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு.. அமைச்சர் செங்கோட்டையன்..

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பெற்றோரை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு, ஜூன்-3

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது ;-

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும். சூழ்நிலை மற்றும் பெற்றோர்கள் மனநிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.
பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும். மாணவர்களின் நலன் கருதி கல்வி ஆலோசகர்கள் கருத்தை கேட்டு முதல்வர் பழனிசாமி முடிவெடுப்பார். பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *