லண்டனில் கோட் சூட்டில் கலக்கும் எடப்பாடியார்

லண்டன் ஆகஸ்ட் 29:

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவத்துறை தொடர்பாக இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 நாள் சுற்றுப் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், முதல்-அமைச்சரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என 10 பேர் சென்றுள்ளனர்.

இந்நிலையில், லண்டனில் இன்று தொழில்துறை பிரதிநிதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்  2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணித்தர மேம்பாடுகள் மற்றும் கொசுக்களால் ஏற்படும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் பீலா ராஜேஷ் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *