சென்னையை புரட்டி எடுக்கும் கொரோனா.. ராயபுரத்தில் 3000ஐ தாண்டிய பாதிப்பு..!

சென்னையில், கொரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 16,585-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, ஜூன்-3

சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 806 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 16,585-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,921 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 2,007 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,871 பேரும், திருவிக நகா் மண்டலத்தில் 1,711 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,411 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *