தென் மாவட்ட ரயில்கள் இனிமேல் எழும்பூருக்கு செல்லாது… பயணிகள் அதிருப்தி…

சென்னை, அக்டோபர்-05

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரண்டு மாதங்களுக்கு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்தே மறுபடியும் புறப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தென் பகுதியான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்கள் சென்னை செல்ல பெரும்பாலும் ரயில்களை பயன்படுத்துகின்றன. இதனால், நிலையில் நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் எப்போதும் மக்கள் கூட்டத்துடனே காணப்படும்.

சென்னை எழும்பூர் வரை சென்று திரும்பும் நெல்லை மற்றும் பொதிகை ரயில்கள் அக்டோபர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை இரு மாதங்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் அடுத்த இரண்டு மாதத்திற்கு தாம்பரத்தில் இருந்து தான் ரயிலில் ஏறமுடியும். சிட்டியில் இருக்கும் பெரும்பாலானோருக்கு எழும்பூர் ரயில் நிலையம் மிகவும் பக்கமாக இருக்கும், ஆனால் போக்குவரத்து நெரிசல்களுக்கிடையே தாம்பரம் செல்வது மிகவும் கடினமான விஷயம். தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வரும் இந்த நேரத்தில் இப்படியான ஒரு அறிவிப்பு பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *