பெண்களை நிர்வாண படம் எடுத்த வழக்கில் கொரோனா பாதித்தவரை கைது செய்த சேலம் போலீசுக்கு நோய் தொற்று..!

பெண்களை நிர்வாண படம் எடுத்த வழக்கில் கொரோனா பாதித்தவரை கைது செய்த சேலம் போலீசுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், ஜூன்-2

சேலம் தாதகாபட்டியை சேர்ந்தவர் லோகநாதன். 35 வயதாகும்
இவர் ஒரு பியூட்டிஷியன். தனியாக அழகு நிலையம் ஒன்றினை நடத்தி வந்தார். இந்த பியூட்டி பார்லரில் விபசார தொழில் நடந்து வருவதாகவும், தங்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டுகின்றனர் என்றும், பாதிக்கப்பட்ட 4 பெண்கள் இவர் மீது 2 தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் லோகநாதன், அவரது நண்பர்கள் சிவா, பிரதீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சமயத்தில்தான் கைதான 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், லோகநாதனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதைகேட்டு அவரை கைது செய்து வந்த பெண் போலீசார் அதிர்ச்சியடைந்ததுடன், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். குற்றவாளிகளை தாங்கள்தான் கைது செய்து கோர்ட் வரை கொண்டு சென்று ஆஜர்படுத்திவிட்டு, விடிகாலையில்தான் தங்களது வீட்டுக்கு சென்றோம், குழந்தைகளுடன் இருந்தோம் என்று அழுதபடியே சொன்னார்கள். லோகநாதனை கைது செய்ய மகளிர் போலீசாருடன், சட்டம் ஒழுங்கு போலீசாரும் சென்றிருந்தனர்.

கைது செய்து வந்த பிறகு அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேனிலும், மகளிர் போலீஸ் ஸ்டேனிலும் 3 பேரையும் வைத்திருந்தனர். இந்த கைது நடவடிக்கையில் கிட்டத்தட்ட 32 போலீசார் ஈடுபட்டனர். இப்போது இவர்கள் எல்லோருமே கருப்பூர் அரசு பொறியியல் காலேஜ் ஹாஸ்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *