வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்; புதிய வழிகாட்டு முறைகளை வெளியிட்டது தமிழக அரசு…!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வரும் அனைவருக்கும் கொரோனா இருக்கிறதா என்பதை அறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூன்-2

விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு…

  • வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும்.
  • வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்
  • வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்.
  • மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்தில் இருந்து வருவோருக்கு பரிசோதனை கட்டாயம்.
  • பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதி.
  • கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
  • ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
  • அனைத்து பயணிகளுக்கும் அழியாத மையால் தனிமைப்படுத்துவதற்கான முத்திர பதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *