சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்..முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..

சென்னையில் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை, ஜூன்-2

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15,776 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்தின் போது, பல முக்கிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *