இந்திய பிரதமர்-வங்க தேச பிரதமர் சந்திப்பு

புதுடெல்லி, அக்டோபர்-04

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 

வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை, ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள் இருவரும் விவாதித்தனர்.

மேலும் வர்த்தகம், போக்குவரத்து, கலாச்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகள் சார்ந்த 6 முதல் 7 முக்கிய கோப்புகளிலும் கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தமது ட்விட்டர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி – ஷேக் ஹசீனா ஆகியோரது சந்திப்பின் போது தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *