இறுதிச்சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி..!

தமிழகத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை, ஜூன்-1

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி பொது ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டது. தனிமனித இடைவெளி கட்டாயம் என்பதால் திருமணங்கள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இறுதிச்சடங்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

2-வது, 3-வது மற்றும் 4-வது கட்ட ஊரடங்கின்போது பல தளர்வுகள் கொண்டு வந்த நிலையில் இறுதிச் சடங்கில் 20 பேருக்குமேல் கலந்து கொள்ளக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இறுதிச்சடங்கில் 50 பேர் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அப்போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *