மீண்டும் இளமை தோற்றத்தில் அஜித், குதூகலித்த ரசிகர்கள்

சென்னை, அக்டோபர்-05

நடிகர் அஜித்தின் நியூ லுக் போட்டோக்களும், வீடியோக்களும் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சென்னை விமான நிலையத்தில் வந்திருந்த அஜித்தை கண்டு அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். டெல்லியில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திற்கு நடிகர் அஜித் வந்திருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்துகொண்டனர். மேலும், அஜித் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருந்து முற்றிலுமாக மாறியுள்ளார். சமீபத்தில் அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கிறார் என தகவல்கள் வெளியானது. இது தல அஜித்தின் 60-வது திரைப்படம் ஆகும். இந்த நிலையில், முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிகர் அஜித் மாறியிருப்பது தல-60 படத்திற்கான தோற்றமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது இருக்கும் சால்ட் அண்ட பெப்பர் தோற்றத்தில் இல்லாமல் கருகருவென முடியுடன் இளைமையுடன் வந்த அஜித்தை கண்டு ரசிகர்கள் பரவசமடைந்துள்ளனர்.

விமான நிலையத்தில் ரசிகர்கள் அஜித்தை கண்டதும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ரசிகர்களுடன் சேர்ந்து அஜித்தும் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த போட்டோக்களும், வீடியோக்களும் #Thalai60latestpics என்ற ஹேஷ்டேக்கில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *