சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்கள் வரையில் ஓய்வு..!

சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்கள் வரையில் ஓய்வு அளிக்க கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஜூன்-1

சென்னையில் போலீசாருக்கு கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 300-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்கள் வரையில் ஓய்வு அளிக்க கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். க

சட்டம் – ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் இந்த ஓய்வை எடுத்துக்கொள்ளலாம். ஒரு காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதம் பேருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு 100 பேர் பணியில் இருக்கும் இடத்தில் 10 பேருக்கு ஓய்வு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கமி‌ஷனரின் இந்த அறிவிப்பு போலீசார் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *