தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா.. சென்னையில் ஒரே நாளில் 964 பேர் பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, ஜூன்-1

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று (மே 31-ந்தேதி) 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்தது. ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் இன்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 13,170 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 413 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 184-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 964 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 15,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 72 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 10,138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 5,03,339 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.78% ஆக உள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 56.05% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,377 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1162 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 14,750 ஆண்கள், 8,732 பெண்கள், 13 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *