கோவை அம்மா உணவகங்களுக்கு ரூ.87 லட்சம் நிதி.. எஸ்.பி.வேலுமணி வழங்கினார்..!

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஜுன் 30 ம் தேதி வரை 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P வேலுமணி அறிவித்துள்ளார்.

கோவை ஜூன் -1

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் 5ம் கட்டஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகள் மற்றும் நிபந்தனைகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 4ம் கட்ட ஊரடங்கு முடிந்து 5ம் கட்ட ஊரடங்கு தொடங்கிய நிலையில் கோவை மாவட்ட அம்மா உணவகங்களில் ஜூன் 30 வரை 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலுமணி மீண்டும் அறிவித்து இருக்கிறார். கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 அம்மா உணவகங்களும், வால்பாறை , பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு அம்மா உணவகமும் இயங்குகிறது. இந்த 15 அம்மா உணவகங்களில் தினந்தோறும் 3 வேளையும் 20,000 க்கும் அதிகமானோர் சாப்பிடுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S P. வேலுமணி ஏற்பாட்டில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை இன்று நேரில் சந்தித்து கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கியதற்கு மே 31 ஆம் தேதி வரை ஆன தொகை ரூ 61. 19 லட்சத்தையும், ஜுன் 30 வரை இலவச உணவு வழங்குவதற்கான முன் பணம் ரூ 25 லட்சம் என மொத்தமாக ரூ 86.19 லட்சத்தை ரொக்கமாக வழங்கினார். அவருடன் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்களும் சென்று இருந்தனர். . ஊரடங்கு முடியும் வரை கோவை மாவட்ட அம்மா உணவகங்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான செலவை மாவட்ட அதிமுக ஏற்கும் என்று அளித்த வாக்குறுதியை அமைச்சர் S. P.வேலுமணி தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *