மகன் இறந்த சோகத்தில் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை..!

திருச்சியில், மகன் இறந்த அதிர்ச்சியை தாங்காமல், சிலிண்டரை திறந்து வெடிக்கவைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, ஜூன்-1

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே நவல்பட்டு பூலாங்குடி காலனி பாரத்நகர் 8-வது வீதியில் வசித்து வந்தவர் முருகேசனின் மனைவி விஜயகவுரி (வயது 58). இவர் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றுவிட்டார். இவருடைய மகள்கள் விஜயலட்சுமி (32), விஜயவாணி (29), மகன் விஜயகுமார் (27). முருகேசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.

கடந்த 10 மாதத்திற்கு முன்பு விஜயகுமார் அரியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயம் அடைந்த அவர் கடந்த 8 மாதமாக கோமாவில் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜயகுமாரை விஜயகவுரி வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் அவர் படுத்த படுக்கையாகவே இருந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை 5.30 விஜயகுமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ குழுவினர் வந்து பரிசோதித்ததில் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த செய்தியை அருகில் உள்ளவர்களிடம் சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்து வேதனையில் இருந்த விஜயலட்சுமி குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக இரவு 7.30 மணிக்கு வீட்டில் உள்ள அறையில் விஜயகுமாரின் உடலை எடுத்து சென்றனர். அங்கு சமையல் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு மூவரும் சிலிண்டர் அருகே நின்று கொண்டு தீயை பற்ற வைத்தனர்.

தீ பற்றியவுடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் 3 பேரும் உடல் கருகி இறந்தனர். சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் இறந்த துக்கத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *