தமிழகத்தில் ஊரடங்கை மீறியதற்காக இதுவரை ரூ.9.31 கோடி அபராதம் வசூல்..!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,64,440 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 528459 வழக்குகளும், ரூ.93,17,8224 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-1

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,64,440 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5335 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 4,38,720 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2605 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது. இதுவரை, 528459 வழக்குகளும், ரூ.93,17,8224 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4756 வழக்குகளும், ரூ..21,57,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *