கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

சென்னை, ஜூன்-1

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக, நாளை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

சென்னையில் இதுவரை 14,802 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவலை தடுப்பு குறித்து சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *