இடைக்கால ஜாமீன் நிறைவு.. நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் ஆர்.எஸ்.பாரதி

இடைக்கால ஜாமீன் நிறைவடைந்த நிலையில், ஆர்.எஸ். பாரதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.

சென்னை, ஜூன்-1

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞா் வாசகா் வட்டம் சாா்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, தாழ்த்தப்பட்டவா்கள் குறித்து பேசிய கருத்துக்களின் அடிப்படையில் அவா் மீது புகாா் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆா்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆா்.எஸ்.பாரதி, கடந்த மே 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமாா், ஆா்.எஸ்.பாரதிக்கு மே 31-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், இடைக்கால ஜாமீன் நிறைவடைந்த நிலையில், ஆர்.எஸ். பாரதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *