ராதாபுரம் இன்பதுரை இப்போ துன்பதுரை-மு.க.ஸ்டாலின்

சென்னை, அக்டோபர்-05

நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் இடைத்தேர்தலில் வரும் முடிவுகள் மூலம் ராதாபுரம், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த புதுக்கோட்டை பரணி கார்த்திகேயன் தலைமையில் அமமுகவைச் சேர்ந்த 3000-திற்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையால் இன்பதுரை தற்போது துன்பதுரையாகி விட்டார் என்று விமர்சித்தார்.

இதனிடையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை நினைவு கூர்ந்த ஸ்டாலின், தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல, பாஜக ஆட்சி தான் என்று குறிப்பிட்டார், திண்டிவனம், ராதாபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் தில்லுமுல்லு செய்து அதிமுகவினர் வெற்றி பெற்றனர். மோடியின் தயவால் தான் அதிமுக வெற்றி பெற்றது. இல்லையெனில் திமுக தான் வென்று இருக்கும்.

நீதிமன்ற மற்றும் இடைத்தேர்தல் தீர்ப்பிற்கு பிறகு நாங்குநேரி, விக்கிரவாண்டி, ராதாபுரம் என 3 சட்டமன்ற உறுப்பினர்களை திமுக கூட்டணி பெறும் என மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். மணி ரத்னம், ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீதான தேசத் துரோக வழக்கை பிரதமர் மோடி வாபஸ் பெற வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *