இந்தியாவில் 1.90 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. 5394 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, ஜூன்-1

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 190535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5394 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 91819 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4835 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 93322 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2286 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 29,329 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 22,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 173 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,757 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 19,844 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 473 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8,478 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *