தென் கொரியாவிலிருந்து மேலும் 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை.. கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு..!

கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து மேலும் 1.50 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் இன்று தமிழகம் வந்துள்ளன. இதனால், தமிழகத்தில் வரக்கூடிய காலங்களில் மேலும் பரிசோதனை செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கப்பட கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-31

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.
நோய் தொற்றுக்கு 22 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த 17-ந்தேதி 1 லட்சம் பி.சி.ஆர். கருவிகளும், 26ம் தேதி 1.5 லட்சம் பி.சி.ஆர், கருவிகள் என 2.5 லட்சம் பி.சி.ஆர், கருவிகள் தமிழகத்திற்கு வந்தன.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து இன்று மேலும் 1.50 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் இன்று தமிழகம் வந்தன. இந்த கருவிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்படும். இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.

தமிழகத்தில் 72 பரிசோதனை மையங்கள் மூலமாக அதிலும் குறிப்பாக 43 அரசு பரிசோதனை மையங்களிலும் 29 தனியார் பரிசோதனை மையங்களுக்கும் தற்போது வந்துள்ள 1.50 லட்சம் பிசிஆர் கருவிகளானது பிரித்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும் என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகமானது தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *