இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு.. 5164 பேர் பலி..

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 193 உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, மே-31

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 5,164 உயர்ந்துள்ளது.

தற்போது மருத்துவமனைகளில் 89,995 சிகிச்சை பெற்று வரும் நிலையில், 86,984 குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2197 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28,081 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 21,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,000 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 18,549 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 416 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8075 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *