தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடைகள் அப்படியே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-31

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;-

“கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை (மே 31) நள்ளிரவு 12 மணிவரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்க்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை தமிழகத்தில் வழிப்பாட்டுத் தலங்களைத் தலங்களை திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும். அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது.

பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. நாளை முதல் பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்த மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 60% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிபாட்டு நடைமுறைகளை பின்பற்றி பொதுபோக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும். மண்டலங்களுக்கு இடையே பயணிக்க இ- பாஸ் தேவையில்லை. வெளி மாநில பயணங்கள், மண்டலங்களிடையே சென்று வர இ- பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30- ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி,வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பொதுபோக்குவரத்து அனுமதி அனுளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கவும், வாடகை கார்கள் மூன்று பயணிகளுடன் இயங்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரு பயணிகள் வரை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறப்பதற்கு தடை தொடர்கிறது. ஜூன் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்கவும் தடை தொடர்கிறது. கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரவும்; அதனை ஊக்கப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார் கூட்ட அரங்குகளை திறப்பதற்கு தடை தொடரும். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடர்கிறது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது; இறுதி நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்க அனுமதி. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கவும், 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இயன்றவரை பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கவும், கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏசி வசதியைப் பயன்படுத்தாமல் வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகளைத் திறக்கவும், வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதிப்படுத்த வேண்டும். ஜூன் 8- ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்தவும், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் குளிர்சாதன இயந்திரங்கள் இருந்தால் அவை இயக்கப்படக் கூடாது. தேநீர் கடைகளில் 50% அளவு மட்டும் வாடிக்கையாளர் அமர்ந்து தேநீர் அருந்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *