கோவையில் பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்..

கோவையில் பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கோவை, மே-30

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 8 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பும், 4 லட்சம் குடும்பங்களுக்கு 10 வகையான காய்கறி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணப்பணிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் அனை வருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோவை மாவட் டத்தில் செயல்பட்டுவரும் 15 அம்மா உணவங்களில் 3 வேளையும் சுமார் 22 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மொத்த செலவுத் தொகை ரூ. 43 லட்சத்தையும், கோவை புறநகர் மற்றும் மாநகர் அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஊரடங்கு காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

உதவும் கரங்களை வலுப்படுத்தும் வகையில் நல்லறம் அறக்கட்டளை மூலம் கோவை மாநகரில் உள்ள 8 பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் சீங்குபதி, தணிக்கண்டி, சர்க்கார் போரொத்தி உள்ளிட்ட மலை கிராமங்கள் முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 27 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை குப்பனூர் பகுதி மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களாக காய்கறி தொகுப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *