நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு..மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..

நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் அரசு அனுமதி அனுமதி அளித்துள்ளது.

டெல்லி, மே-30

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்துவருகிறது. இதுவரை சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,983 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு கொஞ்சம் கூட கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிகிறது.

நான்காம் கட்ட பொதுமுடக்கத்திலேயே நிறைய தளர்வுகள் செய்யப்பட்டன. நாளையுடன் நான்காம் கட்ட பொதுமுடக்க்ம் முடியும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஜூன் 30 வரை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும், ஏற்கனவே இருக்கும் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், கோவில்களை ஜூன் 8ம் தேதி முதல் திறக்கலாம் என அறிவித்துள்ளது.

மேலும் ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றை ஜூன் 8ம் தேதி முதல் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்கள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவற்றிற்கான தடை நீடிக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிற பகுதிகளில் படிப்படியாகத் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தி, ஜூலை மாதத்தில் கல்வி நிறுவனங்களைத் திறப்பது பற்றி முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *