தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,184-ஆக உயர்வு..

தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, மே-30

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய விவரத்தை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 938 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 856. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 82.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 21, 184 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 687 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,000- ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 160-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 71 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 9,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *