புதிய மின் கட்டணம்: பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்!!!,

அக்டோபர்-05

புதிய மின் இணைப்பு கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக மின்வாரியம் வீடு மற்றும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க பல்வேறு கட்டணங்களை வசூலித்து வருகிறது. புதிதாக மின் இணைப்பு பெறுவோர் மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்பு தொகை, வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவற்றை செலுத்தவேண்டும். இந்த கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. இந்த நிலையில் மின்வாரியம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணத்தை உயர்த்தி, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை புதிய மின் இணைப்புக்காக ரூ.1, 600 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது இது பல மடங்கு அதிகரித்து 6,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒருமுனை மின்சார கட்டணமாகும். இதற்கான வைப்புத் தொகை ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. பதிவு கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ. 100 ஆகி உயர்ந்துள்ளது. மீட்டர் வைப்பு கட்டணம் ரூ.600 ஆகவும், வளர்ச்சி கட்டணம் சென்னைக்கு ரூ.400-ல் இருந்து ரூ.5 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. மற்ற பகுதிகளுக்கு ரூ.1, 400 வசூலிக்கப்படுகிறது. வைப்புத் தொகை ரூ.200. இதன் மூலம் சென்னைக்கு மின் இணைப்பு கட்டணம் ரூ.1600-ல் இருந்து ரூ. 6 ஆயிரத்து 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு ரூ.1, 600-ல் இருந்து ரூ.2,800 ஆகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *