ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, மே-30

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா, 27.5.2020 அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து முதல்வர் பழனிசாமி மிகுந்த வேதனை அடைந்தார். பணியின் போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணிகளில், தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஜோன் மேரி பிரிசில்லா சேவையினை அங்கீகரிக்கும் விதமாக, சிறப்பினமாக, அவருடைய குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *