சென்னையில் ரயில், பஸ் போக்குவரத்தை இயக்கினால் அதிக உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும்.. மருத்துவக்குழு எச்சரிக்கை..!

சென்னையில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தை இயக்க அனுமதிக்கக்கூடாது என்று மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை, மே-30

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13362 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6869பேர் குணம் அடைந்துவிட்டனர். 109 பேர் உயிரிழந்துள்ளனர். 6300 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவக்குழு இன்று மீண்டும் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில் மருத்துவக்குழு சென்னையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவது சரியாக இருக்காது என்றும் முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னையில் சமூக பரவல் இல்லை. சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறியிருந்தால் உயிரிழப்புகள் அதிகமாகி இருக்கும். சென்னையில் பொதுப்போக்குவரத்தை தளர்த்தினால் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *