வீடுதேடி வரும் ஊதியம்..100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்காக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை அடுத்த 3 மாதங்களுக்கு வீடுகளுக்கேச் சென்று வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, மே-30

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், 100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சிரமத்தை போக்க தற்போது முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதாவது, 100 நாள் வேலைநாள் திட்டத்தின் பணியாற்றி வருபவர்கள், தங்களது ஊதியத்தை எடுக்க வங்கிகளுக்கு சென்று எடுத்து வரவேண்டும். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து வசதியின்மை, கூட்டம் சேராததை தவிர்க்க வேண்டும் என்பதால், அடுத்த 3 மாதங்களுக்கு ஊதியத்தை வீடுகளுக்கே சென்று வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். வங்கி அதிகாரிகளின் மூலம் தொழிலாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *