சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்.. அமைச்சர் விஜயபாஸ்கர்..

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-30

சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கொரோனா வார்டை சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும். ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவில் உள்ளது. கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது.கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. கொரோனா நோயாளிகளிடம் வேறுபாடு காட்டாதீர்கள். 140 சுகாதார மையங்களில் காய்ச்சலை அறிய சோதனை செய்யப்படும். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க இனிவரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கருவிகளை பராமரிக்கத் தனி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளிடம் யாரும் வேறுபாடு காட்ட வேண்டாம். ராயபுரம் பகுதியில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *