தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை.. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!

கொரோனா தொற்று அதிகம் உள்ள நிலையில் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை. 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-30

இது தொடர்பாக கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது;-

கொரோனா தொற்று அதிகம் உள்ள நிலையில் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழு முடிவு செய்யும். பள்ளி வேலை நாட்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் குறைக்கப்படும்.

ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்தக் குழப்பமும் வேண்டாம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றுதான் கூறினேன்.
மாணவா்கள் எந்தப் பள்ளிகளில் படித்தாா்களோ அந்தப் பள்ளிகளிலேயே தோ்வு எழுதலாம்.

தற்போது கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டும்தான் கல்வி கற்றுத் தர முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க தடையும் இல்லை. மாணவர்கள் எந்த பள்ளிகளில் படித்தார்களோ அந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம். மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *