சென்னையில் உயர்ந்து வரும் கொரோனா மரணங்கள்.. லிஸ்ட் வெளியிட்ட மாநகராட்சி..

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-30

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 154-ஆக உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109-ஆக உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,678 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,437 பேருக்கும், அண்ணாநகரில் 1,143 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தண்டையார்பேட்டையில் 1,425 பேரும், தேனாம்பேட்டையில் 1,500 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *