ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகத்துக்குள் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை, மே-29

பொது முடக்கம் காரணமாகத் தடை செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை தமிழகத்தில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை தவிர்த்து சில தடங்களில் சிறப்பு ரயில் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது.

இதனிடையே கடந்த 23-ம் தேதி தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கையில் ‘‘கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு’’ குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜூன் 1-ம்தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி ஆகிய வழித்தடங்கள் வழியே இந்த ரெயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *